Categories
தேசிய செய்திகள்

விளையாட்டை நிறுத்துங்கள்… நேரத்தை வீணடிக்க வேண்டாம் – மோடியை விமர்சித்த ராகுல் காந்தி! 

சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவில் பரவி வரும் கொரோனோ வைரஸால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோரோனோ வைரஸ் குறித்த அச்சம் தொற்றியுள்ளது. அந்தந்த நாடுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும் வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பேஸ்புக் , ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து நேற்று யோசித்தேன் என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கும் மோடி இவ்வாறு பதிவிட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 

இதனால் பிரதமர் மோடி ட்விட்டரை விட்டு வெளியேற கூடாது என வலியுறுத்தி அவரை பின்பற்றுபவர்கள் #NoModiNoTwitter, #NoSir உள்ளிட்ட ஹாஷ் டேக்களை பயன்படுத்தி ட்வீட் செய்து வந்தனர். இந்நிலையில் “வரும் மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. 

இதனை முன்னிட்டு நமது வாழ்விலும், பணியிலும் நமக்கு அதிகளவு ஊக்கமளிக்கும் பெண்களை கௌரவிக்கும் வகையில், எனது ட்விட்டர் கணக்கை அன்றைய தினம் பெண்களிடம் ஒப்படைக்கலாம் என இருக்கிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, “இந்தியா அவசரநிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த நிலையில், உங்கள் சமூக ஊடக கணக்குகளுடன் கோமாளித்தனமாக விளையாடி நேரத்தை வீணாக்குவதை விட்டுவிடுங்கள்.  கொரோனோ பாதிப்பில் இருந்து ஒவ்வொரு இந்தியனையும் காப்பதற்கான திட்டங்கள் குறித்துதான் பிரதமரின் முழு கவனம் இருக்க வேண்டும். இ தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை இதில் பாருங்கள், என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |