சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 4 வயது சிறுமி ஊருணியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கருங்குளம் கிராமத்தை அடுத்து உள்ள தனிவீரனேந்தல் கிராமத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி ( 4 ), சாலினி ( 5 ) என இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மதியம் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் ஊருணியில் இருந்து தூக்கு வாளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஜனனி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி பலியானாள். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இதுகுறித்து காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.