சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் சாம்சங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புஷ்பராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை குழந்தை விளையாட்டி கொண்டிருந்த போது புஷ்பராணி சமையலறையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது டிவி அருகே இருந்த மின்சாரப்பட்டியை குழந்தை தொட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குழந்தையை புஷ்பராணி மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.