நாற்காலியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனையூரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். பிறக்கும்போதே ஜனனியின் தலையில் நீர்க்கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மதுரை பெரிய மருத்துவமனையில் ஜனனிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-ஆம் தேதி வீட்டில் உள்ள நாற்காலி மீது ஏறி ஜனனி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராமல் தவறி விழுந்ததால் ஜனனியின் பின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை மதுரை பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.