பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சாஹர்சா மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் கடுமையான காற்று மற்றும் மின்னலும் தொடர்ச்சியாக இருந்தது. வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அவருடன் இருந்த மற்றொரு நபரும் உடல் கருகி உயிரிழந்தார்.
மேலும் ஒரு நபர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மின்னல் தாக்கிய விபத்தில் ஐந்து பேரின் உடலையும் மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.