கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு வந்துள்ளன. அந்த யானைகள் மூன்று கூட்டமாக பிரிந்து அந்த மனதிற்குள் சுற்றி வருகின்றனர். இதில் 10 யானைகள் சேர்ந்த யானை கூட்டம் ஒன்று தேவகோட்டை அருகிலுள்ள நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எஸ் குருபட்டி பகுதியில் மூன்று யானைகள் ஆனந்த்பாபு என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை நாசம் செய்துள்ளது.
இதையடுத்து நேற்று காலை நெற் பயிர் நாசம் அடைந்துள்ளதை கண்ட ஆனந்த் பாபு தேனி கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு வனத்துறையினர் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். மேலும் தேனி கோட்டை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.