கேன் வில்லியம்சன் அதிர்ச்சியூட்டும் வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்டதை அடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அவரை ஏலத்தில் எடுக்குமா என்பது குறித்து ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை வெலிங்க்டனில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். அதேபோல் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் தலைமை தாங்குகிறார்.
முன்னதாக டிசம்பர் 13 ஆம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிர்ச்சியூட்டும் வகையில் விடுவித்தது.
இந்நிலையில் வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுக்குமா என்ற கேள்விக்கு ஹர்திக் பாண்டியா பதிலளித்தார். ஹர்திக் பாண்டியா கூறியதாவது, ஐபிஎல் என்பது ஐபிஎல், இப்போது நான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன். “இப்போது அதுபற்றி எனக்கு தெரியாது, மினி ஏலத்தில் வில்லியம்சனை எடுக்கப்படுவது பற்றி சிந்திக்க இன்னும் அதிக நேரம் இருக்கிறது என்றது பதிலளித்தார்.. கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ஹர்திக் பாண்டியா சிறப்பாக வழி நடத்தி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது..
நியூசிலாந்துக்கு எதிரான டி20 இந்திய அணி :
ஹர்திக் பாண்டியா (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கி ), சஞ்சு சாம்சன் (வி.கீ ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
இந்தியாவுக்கு எதிரான டி20 நியூசிலாந்து அணி :
கேன் வில்லியம்சன் (கே ), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே (வி.கீ ), லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, பிளேயர் டிக்னர்