Categories
சினிமா தமிழ் சினிமா

வில்லனாக நடித்து இத்தனை விருதுகளா….? திரையுலகை அசத்திய பிரபல நடிகர்…. வெளியான லிஸ்ட் இதோ….!!

பெங்களூரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் கே பாலச்சந்தரின் டூயட் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளில் கௌரவத் தோற்றம், எதிர்மறை கதாபாத்திரம் போன்றவற்றில் தனது நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று தனி ரசிகர்களை வைத்திருப்பவர் இவர். பல திரைப் படங்களில் வில்லனாக அசத்திய பிரகாஷ்ராஜ் அதற்கு பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவ்வகையில் 1996 ஆம் ஆண்டு கல்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததற்கு தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் பிரகாஷ்ராஜுக்கு வழங்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு வானவில் திரைப்படத்திற்கு சிறந்த வில்லனுக்கான  விருது பிரகாஷ்ராஜுக்கு கொடுக்கப்பட்டது. பிரகாஷ்ராஜ் என்றாலே “செல்லம் ஐ லவ் யூ” என்ற வசனம் ரசிகர்களிடையே பிரபலமாக காரணமாக இருந்த கில்லி படத்திற்கும் 2004ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜுக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோன்று சிவகாசி, வில்லு. போக்கிரி என மூன்று விஜய் படங்களிலும் வில்லனாக நடித்து அதற்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அதோடு இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகடமி விருதையும் சிங்கம் படத்திற்காக பிரகாஷ்ராஜ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |