Categories
தேசிய செய்திகள்

விலை உயர்ந்த சைக்கிளை வெறும் ரூ.2,000-க்கு விற்ற பலே திருடன்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ஹரியானாவில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி, அதை ரூ.2,000, 3,000-க்கு விற்பனை செய்துவந்த திருடனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கைதான திருடனிடம் இருந்து சுமார் 62 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர் ரவிக்குமார் என்பதும், இவர் பஞ்ச்குலாவிலுள்ள மஜ்ரி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவருவதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். அதாவது ரவிக்குமார் பஞ்ச்குலாவை சுற்றி இருக்கும் பல பகுதிகளில் சைக்கிள்களை திருடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக சென்ற 14 ஆம் தேதி செக்டார் 26 பகுதியிலிருந்து ரூ.15,000 மதிப்புள்ள சைக்கிளை திருடியதாக தெரிகிறது. திருடப்பட்ட சைக்கிள்கள் குறித்து புகார் பெறப்பட்டதை அடுத்து, 4 நாட்களுக்குப் பின் ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ரவிக்குமார் திருடிய மொத்தம் 62 சைக்கிள்ளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதில் சில சைக்கிள்கள் 20,000 ரூபாய் வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்ற 2021 ஆம் வருடம் சண்டிகரின் ராய்பூர் குர்த் பகுதிக்கு இடம்மாறிய ரவிக்குமார், ஸிராக்புர் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதன்பின் அவர் போதைக்கு அடிமையானதால் அந்த வேலை பறிபோனது. அதனை தொடர்ந்து பஞ்ச்குலாவிற்கு வந்து சைக்கிள்களை திருடுவதை ரவிக்குமார் வழக்கமாகக் கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |