வேளாண் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் பார்த்திபனூரில் வைத்து பச்சை துண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேளாண் இடு பொருட்களான உரங்கள், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, கால்நடை தீவனங்கள் மற்றும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பொதுச் செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர் மதுரைவீரன், சிவகங்கை மாவட்ட செய லாளர் அய்யனார், துணை செயலாளர் அக்கினி சாமி, பொருளாளர் தவம், பரமக்குடி தாலுகா செயலாளர் வேந்தை சிவா, ஒன்றிய நிர்வாகிகள் முத்துக்குமார், மாயாண்டி சாமி உள்பட பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.