சாம் கரனுக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் டொமினிக் டிரேக்ஸை சிஎஸ்கே மாற்று வீரராக எடுத்திருக்கிறது.
தற்போது 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, சார்ஜா மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.. தற்போது சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள் பெற்று 2ஆவது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.. இதனிடையே சென்னை அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனுக்கு கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய ஆட்டத்தின் முடிவில் முதுகு வலி ஏற்பட்டுள்ளது..
இதையடுத்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது முதுகுத் தண்டு பகுதியில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.. இதையடுத்து சுட்டிக்குழந்தை சாம் கரன் ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக சிஎஸ்கே அணி நிர்வாகமும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளது..
கடைக்குட்டி சிங்கம் சாம் கரன் விலகியதால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.. இந்நிலையில் தற்போது சாம் கரனுக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் டொமினிக் டிரேக்ஸை சிஎஸ்கே மாற்று வீரராக எடுத்திருக்கிறது.. 23 வயதான டொமினிக் 19 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இடது கை பேட்ஸ்மேனான டிரேக்ஸ் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.