மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசும் முயற்சி மேற்கொண்டது. அந்த நேரத்தில் போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமை கொண்டாடிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் கோட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் தீர்ப்பு தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சாதகமாக அமைந்தது. இதனால் போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இது தொடர்பாக ஜெ தீபா விளக்கம் அளித்துள்ளார். அதில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் விற்பனைக்கு வரும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த வதந்திகளை நான் கடுமையாக மறுக்கிறேன். இந்த வீடு விற்பனைக்கு என்று நாங்கள் யாரும் சொல்லவும் இல்லை. யாரையும் அணுகவும் இல்லை. வேதா நிலையத்தை பொருத்தவரை அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு வருகிறோம். மிக விரைவில் அங்கு குடியேறும் எண்ணம் உள்ளது. இதனால் இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்பள்ளி வையுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.