மத்திய அரசு இந்தியாவை விற்பனை பொருளாக்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் வழித்தடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் தனியார் மயமாக்குவதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவை விற்பனை பொருளாக்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அவர் தனது ட்டுவிட்டர் பதிவில் முதலில் இந்தியாவின் மரியாதை விற்கப்பட்டதாகவும், தற்போது இந்தியாவே விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.