Categories
உலக செய்திகள்

விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை…. “முன்னிலையில் ஜோபைடன்” ட்ரம்பின் நிலை…. வெளியான தகவல்…!!

வாக்கு எண்ணிக்கை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜோபைடன் 131 தேர்தல் சபை வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார் மற்றும் டிரம்ப் 91 வாக்குகளைப் பெற்று பின்னடைவில் இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் மட்டுமே ஜனாதிபதி ஆக முடியும். நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கிவிட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ட்ரம்ப் மற்றும் ஜோபைடன் ஆகிய இருவருமே ஒரே மாதிரியாக 12 மாகாணங்களில் வெற்றியை குறித்துள்ளனர். புளோரிடா மாகாணத்தில் 51.2% வாக்குகளுடன் ட்ரம்ப் முன்னிலையிலும், ஜோ பைடன் 47.8% வாக்குகளை பெற்று பின்னடைவிலும் இருப்பதால், புளோரிடா ட்ரம்ப்க்கு சாதகமாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சாரநாத் மற்றும் கரோலினா இடங்களிலும் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் இறுதி நிலவரப்படி ஒஹையோவில் திடீரென ஜோபைடன் முன்னிலையிலுள்ளார். ஒக்லஹாமா, கெண்டகி, இன்டியானா, டென்னிசீ, வெஸ்ட் வேர்ஜினியா, அர்கஜ்சாஸ் உள்ளிட்ட இடங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க், நியூஸிலாந்து, நியூஜெர்ஸி, மேரிலாண்ட் மசாசுசெட்ஸ், வெர்மான்ட்  ஆகிய இடங்களில் ஜோபைடன் வெற்றி பெற்றிருக்கிறார். இதனை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |