ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஏழமிட்டவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த 15 வது சீசனுக்கான ஏலம் நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஏலமிட்டு வந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏலம் தொடர்ந்து நடைபெறவில்லை சிறுது இடைவெளி விடப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலங்கை வீரர்களை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணி கடுமையாக போட்டி போட்டு வந்துள்ளனர்.
இந்த ஏலத்திற்காக மொத்தம் ஆயிரத்து 1214வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என தெரிவித்தது. அந்த 590 வீரர்களில் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் 228 பேர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்கள் 355 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் அண்டை நாடு என்ற அடிப்படையில் மெகா ஏலத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 370 இந்தியர்களும் 720 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.