இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக வங்கி தொடர்பான சேவைகளை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டும் அல்லாமல் எஸ்பிஐ அப்ளிகேஷன் ப்ரோக்ராமிங் இன்டர்ஃபேஸ் சேவையை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது எஸ் பி ஐ வங்கியில் whatsapp பேங்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் சில வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இந்த மெசேஜில் தளத்தை பயன்படுத்தலாம்.
இருந்தாலும் எஸ்பிஐ வாட்ஸப் வங்கி அமைப்பை செயல்படுத்தப்பட்ட பிறகு என்னென்ன சேவைகள் வழங்கப்படும் என்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. தற்போது பாரத ஸ்டேட் வங்கி அதன் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு எஸ்பிஐ கார்டு வாட்ஸ் அப் கனெக்ட் என்ற பெயரில் whatsapp அடிப்படையிலான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த புதிய சேவையின் மூலமாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கணக்கு விவரம், நிலுவைத் தொகை,கார்டு பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.இந்த சேவைகளுக்கு பதிவு செய்ய, கார்டுதாரர்கள் 9004022022 என்ற எண்ணுக்கு ‘OPTIN’ என்ற WhatsApp செய்தியை அனுப்ப வேண்டும். அவர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 08080945040 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.