தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது மனைவி பிரேமலதா கட்சி தொடர்பான கூட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.கட்சியில் பிரேமலதாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேசமயம் விஜய பிரபாகரனையும் அவர்கள் மறந்துவிடவில்லை.
இளைஞர் அணியை வழிநடத்தி செல்லும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதற்கு ஏற்ப இளைஞர் அணியில் மாநில தலைமை பொறுப்பை அவரிடம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.விரைவில் நடைபெற உள்ள தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.