தமிழில் தடையற தாக்க திரைப்படத்தில் அறிமுகமான ரகுல்பிரீத் சிங்குக்கு, கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று வெற்றிகரமாக ஓடி பெயர்வாங்கி கொடுத்தது. இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் கமல்ஹாசனில் இந்தியன்-2 படத்திலும் அவர் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னதாக ஹிந்திநடிகரும், தயாரிப்பாளரும் ஆன ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாகவுள்ள புகைப்படத்தை ரகுல்பிரீத் சிங் வலைத்தளத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதை உறுதிசெய்தார்.
இப்போது ரகுல் பிரீத் சிங்குக்கு 32 வயதாகிறது. ஆகவே அடுத்தசில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரகுல்பிரீத் சிங்கின் சகோதரர் கூறியதாவது, “அனைத்து காதல் உறவுக்கும் திருமணம் தான் முடிவு. இவற்றில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ஆகவே ரகுல்பிரீத் சிங்-ஜாக்கி பக்னானி திருமணம் விரைவில் நடக்கும். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை ரகுல்பிரீத் சிங் வெளியிடுவார்” என்று கூறினார். எனவே ரகுல் பிரீத் சிங்கின் திருமண அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு பின் தொடர்ந்து நடிப்பாரா என்பது தெரியவில்லை.