விரைவில் நிலைமை சரியாகும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆழ்வார்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை ஆகிய மாநகரின் சில முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் ட்விட்டர் பக்கத்தில் “நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்துள்ளது. இது எதிர்பாராத கனமழை. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய ஒவ்வொரு அதிகாரியும், நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வருகின்றனர். சீரமைப்பு பணிகளை நானும் நேரடியாக ஆய்வு செய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும்” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். pic.twitter.com/pi00tdt873
— M.K.Stalin (@mkstalin) December 31, 2021