அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை மீட்கும் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறுவதோடு, ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் அமெரிக்க குடிமக்களை காபூலில் இருந்து வெளியேற்றும் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தலிபான்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பதினை பொறுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால் அங்குள்ள மக்களை விமானம் மூலம் விரைவில் வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.