கடந்த 20ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி சேத்தியாதோப்பில் விசிக ஆவண மைய பொறுப்பாளர் அரங்க தமிழ் ஒளி-ஜெனிபா ஆகியோரின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதன் பிறகு திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி பேசினார் திருமாவளவன்.
அப்போது, “நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் நமது கட்சியில் உள்ள தம்பிகள் என்னை போல் இல்லாமல் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது என் அன்பார்ந்த வேண்டுகோள்” என்று கூறியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவனின் இந்த பேச்சு கட்சியினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.