பிரிட்டனில் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான Clive Dix, வரும் மூன்று மாதங்களில் நாட்டில் கொரோனாவின் தடம் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பணிக்குழு தலைவர் Clive Dix, வரும் 2022ஆம் ஆண்டு வரை நாட்டு மக்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் தேவைப்படாது என்று கூறியுள்ளார். பிரிட்டனில் தற்போது வரை சுமார் 50 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வேகம் நீடித்தால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வரப்போகும் குளிர்காலங்களில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நாட்டில் மக்கள் அனைவரும் ஆர்வமாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் மூன்றாம் டோஸிற்கான அவசியம் தேவைப்படாது என்றும் அவ்வாறு தேவைப்படும் பட்சத்தில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது வரை நாட்டில் சுமார் 34.5 மில்லியன் மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 15.3 மில்லியன் மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசியையும் செலுத்தி கொண்டுள்ளனர்.