Categories
மாநில செய்திகள்

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000…. முதல்வர் சொன்ன குட் நியூஸ்….!!!!

புதுச்சேரியில் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்றுள்ளார் CM ரங்கசாமி. செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர், மத்திய நிதியமைச்சர், பிரதமர் ஆகியோரை சந்தித்து புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு 2 ஆயிரம் கோடி தேவை என்று வலியுறுத்தி இருந்தோம். அதில் தற்போது மத்திய அரசு 1400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

எப்படி இருந்த புதுச்சேரி தற்போது இப்படி மாறி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். மத்திய அரசு கொடுக்கும் நிதியை பயன்படுத்தி புதுச்சேரியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்தபடி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் இந்த அறிவிப்பை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |