Categories
மாநில செய்திகள்

விரைவில்…. குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்..

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொடுத்த 502 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.. முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகின்றது.. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.. அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதனை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது.

இந்நிலையில்அமைச்சர் கே.என் நேரு கூறியதாவது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும்.. குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் முறைப்படி அறிவிப்பார். ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் முறைகேடு நடந்தது. அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி எங்களுக்கு வந்தால் ரத்தமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்..

Categories

Tech |