Categories
மாநில செய்திகள்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…. அமைச்சர் கே.என் நேரு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை வரும் 31ம் தேதி வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும். மாநகராட்சி விரிவாக்கத்தின் போது இணைக்கப்படும் கிராம ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை அந்த பதவிகளில் நீடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |