இலங்கையில் வாழும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மருந்து பொருட்கள் நேற்று கொழும்பு போய்ச் சேர்ந்தது.
அவற்றை அதிபர் ரணில் விக்ரமசிங் பெற்றுக் கொண்டார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை இலங்கை சமூகத்துடன் மேலும் சிறப்பாக இணைப்பது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என கூறியுள்ளார்.