புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாட்டார் மங்கலம் பகுதியில் இன்ஜினியரான விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி விநாயகமூர்த்திக்கும், டிப்ளமோ இன்ஜினியரான ரஞ்சிதா(26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 14-ஆம் தேதி புதுமண தம்பதியினர் ரஞ்சிதாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர். நேற்று காலை ரஞ்சிதாவின் தாய் பூங்கொடியை விநாயகமூர்த்தி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மகளின் சார்பில் சந்தேகம் இருப்பதாக பூங்கொடி செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருமணமான 8-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.