Categories
உலக செய்திகள்

விருந்துக்காக சென்ற நண்பர்கள்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!!

நீச்சல் குளத்தில் மூழ்கி கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 80 வயது நிரம்பிய கணவன்-மனைவி விடுமுறையை முன்னிட்டு தெற்கு பிரான்சில் உள்ள ஹெரால்ட் சென்ற இடத்திற்கு சென்றுள்ளனர். இங்கு விடுமுறையை கொண்டாட செல்லும் போதெல்லாம் தம்பதியினர் தங்களுடைய நண்பர்களை அழைத்து வீட்டில் விருந்து வைப்பார்கள். அந்த வகையில் நேற்றும் தம்பதிகள் தங்களுடைய நண்பர்களை வீட்டிற்கு விருந்துக்காக அழைத்துள்ளனர். இந்நிலையில் விருந்துக்காக வீட்டிற்கு சென்ற நண்பர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தில் கணவன்-மனைவி 2 பேரும் சடலமாக மிதந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடனடியாக 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |