பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விருத்தாசலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. .
த்திலுள்ள விருத்தாசலம் என்ற ஊரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பேச்சாளரான நாஞ்சில் சம்பத் வந்துள்ளார். அப்போது புதுவை துணை நிலை ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜனை தரக்குறைவாக நாஞ்சில் சம்பத் பேசியதற்காக பகிரங்க மன்னிப்பினை கேட்க வேண்டும் என பாஜகவினர் முழக்கமிட்டு, அவருடைய காரை வழி மறித்து தாக்க முயன்றுள்ளனர்.
இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் நாஞ்சில் சம்பத் வந்த கார், போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.