Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..மனதில் சங்கடம் ஏற்படும்.. வேலைப்பளு அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிலரது பேச்சால் மனதில் சங்கடம் கொஞ்சம் உருவாகலாம். கூடுதல் வேலைப்பளு கொஞ்சம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உணவு தரம் அறிந்து ஒரு நீங்கள் எடுக்க வேண்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.

கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி கொஞ்சம் காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடும், தேர்வு முடியும் வரை உணவிலும் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்

Categories

Tech |