செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி எனது தலைமையில் அருமனை என்கின்ற இடத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடுவதற்கு அருமனை ஸ்டீபன் என்பவர் முயற்சிக்கிறார், அனுமதி கேட்டிருக்கிறார்.அவர் ஆண்டுதோறும் விழாவை நடத்த கூடியவர், கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில்….
அதற்கு முன்பு ஜெயலலிதா அம்மையாரும் கலந்துகொண்டார், அதற்கு முன்பு இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களும் கலந்துகொண்டார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இந்த ஆண்டு என்னை அழைத்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் வேண்டுமென்றே திருமாவளவன் வந்தால் அங்கே சமூகப் பதற்றம் ஏற்படும் என்று கற்பனையாக அதற்கு தடை விதித்து இருக்கிறார்கள்.
அவர் மீது பொய்யான வழக்கை ஜோடித்து அவரை கைது செய்வதற்கு முயற்சிக்கிறது. இதிலும் காவல்துறையினரின் அணுகுமுறை தவறானது. எனவே காவல்துறை பல இடங்களில் சமூகப் பதற்றம் உருவாகுவதற்கு காரணமாக இருக்கிறது என்பதை முதல்வரின் கவனத்திற்கு நான் எடுத்துச் செல்கிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை, அம்பேத்காரை வைத்து திருமாவளவன் வியாபாரம் செய்கிறார் என்ற விமர்சனம் குறித்து பேசிய திருமாவளவன், வியாபாரிகளுக்கு வியாபாரம் புத்தி தான் வரும், அரசியல் புத்தி வராது என தெரிவித்தார்.