Categories
தேசிய செய்திகள்

வியாபாரிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

வியாபாரிகளுக்கான திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடைபாதை வியாபாரிகளுக்கான அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் ஸ்வநிதி திட்டம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய கேபினட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகளுக்கு பிணையில்லா கடன்கள் வழங்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் 8,100 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதனால் சுமார் 1.2 கோடி பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் வரை இந்தத் திட்டத்தின் கீழ் 31.9 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டம் தற்போது நீட்டிக்கபட்டிருப்பது வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |