இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த பேட்டியளித்த ட்ரம்ப், இந்தியா – அமெரிக்கா உறவு மக்களை மையப்படுத்தியது. இந்திய மக்களின் அன்பான வரவேற்பு தன்னையும், தன் மனைவியையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. வியத்தகு கலாச்சார செல்வங்கள் நிறைந்த நாடு இந்தியா என்றும் தனது இந்திய பயணம் ஆக்கபூர்வமாக அமைந்தது வேண்டும் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் டிரம்ப். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தந்தார். இதனை தொடர்ந்து டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிபர் ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.