Categories
உலக செய்திகள்

வியட்நாம் விமானப் படை பயிற்சி பள்ளிக்கு…. 1 மில்லியன் டாலர் நிதி உதவி…. ராஜ்நாத் சிங் டுவிட் பதிவு….!!!

இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு விமான படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்க்கான காசோலை வழங்கினார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வியட்நாம் விமானப் படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கினேன்.

மேலும் வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை பணியாளர்களுக்கு மொழி மற்றும் தகவல் தொழில் நுட்ப திறன்களை உயர்த்துவதற்கு ஆய்வகம் கணிசமாக பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |