உணவில் சுவைக்காக அதிக அளவு குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதுவும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் அதிக நன்மைகள் பெறுகிறார்கள். இதன் மருத்துவ குணத்தால் செரிமானத் தன்மை மற்றும் பசியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இருந்தாலும் அதை போதுமான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இது உலக அளவில் உயர்ந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் காஷ்மீர் மலைப்பிரதேசத்தில் இதனை உற்பத்தி செய்து வருகின்றனர். இவை மசாலாவின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. இது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையில் வயிற்று வலியை குணமாக்கும் தன்மை வாய்ந்தது. ஆண்மை குறைவு பிரச்சனைக்கு பயன்படுகிறது. ஆஸ்துமா, விறைப்பு குறைபாடு, புற்று நோய் மற்றும் வழுக்கை போன்ற பல பிரச்சனைகளையும் குணப்படுத்தும் தன்மை உடையது.
கருவுற்ற பெண்கள் மூன்றாம் மாதத்திலிருந்து பாலில் காய்ந்த குங்குமப்பூவை கலந்து குடித்துவர தாய்க்கு சேய்க்கும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் தரும். வயிறு உப்புசம் வாயு சேர்வதைத் தடுக்கிறது. ஜீரண சக்தி,மூட்டு வலி மூட்டு வீக்கம் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதனை எடுத்துக் கொள்ளும் போது ஒரு நாளைக்கு 10 கிராமுக்கு மேல் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அது மரணமடைய அதிக வாய்ப்பை ஏற்படுத்தும்.