விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா வெற்றியோடு தனது போட்டியை துவங்கியுள்ளார்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா போட்டியிடுகிறார். இதில் முதல் போட்டியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் சாண்டர்ஸ்ஸோடு இணைந்து களமிறங்கிய சானியா மிர்சா, அலெக்சா மற்றும் டசிரே கிராவ்செக் அணியை 7-5. 6-3 என்ற இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஆடிய சானியா மிர்சாவிற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். தற்போது நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் விளையாடுகிறார்.