கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் கடந்த புதன்கிழமை உயிரிழந்தனர். இதுகுறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் உண்மையான காரணங்கள் தெரியாமல் தேவை இல்லாத கருத்துக்களை சமூக ஊடங்களில் பகிர வேண்டாம்.
மேலும் விரைவில் விசாரணை முடிந்து உண்மையான காரணம் வெளியிடப்படும் என்று இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை தரப்பில், விமான விபத்து குறித்து பொய்யான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.