Categories
உலக செய்திகள்

விமான போக்குவரத்தை அதிரவைக்கும் 5G சேவை…. லீக்கான தகவல்….!!!!

உலகம் முழுவதும் 5G சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதன் முறையாக அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக விமான விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய நாள் அமெரிக்காவிற்கு வரக்கூடிய இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது

5G அலைக்கற்றையால் விமானங்களில் கருவிகளின் இயக்கத்தை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதன் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து இந்த சேவையால் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படாது என்று கூறப்பட்ட பின்பே மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட்டது.

தற்போது 5G சேவையில் விமானங்கள் ரத்து செய்தது உலகளவில் பேசுபொருளாக மாறி உள்ளது. மேலும் 5G சேவையால் விமான விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என்று டிராய் தலைவர் வகேலா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் 5G சேவை 2 ஆண்டுக்குள் அமலுக்கு வரக்கூடும் என்றும் , 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்தாண்டு இறுதியில்தான் நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |