Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. டிக்கெட் விலை அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்க….!!!!

புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது, அங்கிருந்து திரும்புவது என திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்காக டிக்கெட் சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏர் ஏசியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகள் இருக்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை -ஹைதராபாத், சென்னை – பெங்களூர், பெங்களூர்-சென்னை, ஜம்மு -ஸ்ரீநகர் ஆகிய ரூட்களுக்கு ஒன்வே டிக்கெட் விலை 1122 ரூபாய் என அறிவித்துள்ளது.

இந்த சலுகை டிசம்பர் 27-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் விமான டிக்கெட் புக்கிங்கிற்கு மட்டுமே பொருந்தும். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையிலான காலத்திற்கு டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். புத்தாண்டு சலுகையாக ஏர் ஏசியாவும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை -பெங்களூர், பெங்களூரு -சென்னை, சென்னை -ஹைதராபாத் ஆகிய ரூட்களுக்கு விமான டிக்கெட் கட்டணம் 1122 ரூபாய் என அறிவித்துள்ளது.

இந்த சலுகை டிசம்பர் 27-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் டிக்கெட் புக்கிங்கிற்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஜனவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையிலான காலங்களுக்கும் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். புத்தாண்டு தேதி 1-1-2022 என்பதைக் குறிக்கும் வகையில் டிக்கெட் விலை 1122 ரூபாய் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விமான பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |