விமான நிலையங்களில் உள்ள செக்கிங் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில் பல்வேறு விமான நிலையங்களில் உள்ள செக்கிங் கவுண்டரில் போரடிங் பாஸ் வழங்குவதற்கு 200 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏர்லைன் நிறுவனங்கள் இனி போரடிங் பாஸ் வழங்குவதற்கு பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. கூடுதல் கட்டணம் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே விமான நிலையத்தில் செக்கிங் கவுண்டர்களில் போர்டின் பாஸ் வழங்க பயணிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய வேண்டாம் என்று ஏர்லைன் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு விமான பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.