Categories
மாநில செய்திகள்

விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆர்.டி.பி.சி.ஆர்.டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 5-ல் இருந்து 6 மணி நேரத்திற்குள்ளும்,ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 30ல் இருந்து 45 நிமிடங்களுக்குள்ளும், மாற்று உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கு 20 நிமிடங்களில் முடிவுகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 700-ல் இருந்து 800 பயணிகளுக்கு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |