Categories
தேசிய செய்திகள்

விமான சேவையை விரிவுபடுத்தும் நோக்கம்…. ஏர் இந்தியா வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் அடிப்படையில் ஏர் இந்தியா இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு புதியதாக 6 விமானச் சேவையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கிறது. மும்பை நகருடன் நியூயார்க், பாரீஸ், பிராங்க்பர்ட் நகரங்களை இணைக்கும் விமான சேவையையும், இடை நில்லா விமானச் சேவையை மீண்டும் தொடங்கும் அடிப்படையில் தில்லி நகர் கோப்பன்ஹேகன், மிலன், வியன்னா போன்ற நகரங்களை இணைக்கும் விமான சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. புது விமானங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து, தன் விமானச் சேவையை அதிரடியாக தீவிரப்படுத்தி வரும் ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு பல விமானப் பயனிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறி இருக்கிறது.

மும்பை -நியூயார்க் விமான சேவை 2023, பிப்.14 முதல் தினசரி இயக்கப்பட இருக்கிறது. பிப்ரவரி 1 முதல் தில்லி -மிலன் வாரந்தோறும் 4 விமான சேவையும், மார்ச் 1 முதல் தில்லி  வியன்னா, தில்லி – கோப்பன்ஹேகன் விமானசேவை வாரத்தில் 3 நாட்களும் இயக்கப்பட இருக்கிறது. புது அறிவிப்பின் வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏர் இந்தியாவின் இடை நிறுத்தம் இல்லா விமான சேவையின் எண்ணிக்கையானது 79 ஆகவும், பிரிட்டனுக்கு 48 ஆகவும், அமெரிக்காவுக்கு 47 ஆகவும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Categories

Tech |