Categories
தேசிய செய்திகள்

விமான கட்டணம்: 50 % வரை குறைவு…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

விமானத்தில் பயணம் செய்வோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. வருகிற நாட்களில் நீங்கள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், விலை குறைவான டிக்கெட் வாயிலாக பயணம் செய்யலாம். விமான டிக்கெட்டுக்கான கட்டண உச்ச வரம்பை மத்திய அரசு நீக்கியதை அடுத்து, விமானக்கட்டணம் குறைந்துள்ளது. பல்வேறு விமானம் வழித் தடங்களில் 50 % வரை கட்டணங்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி உங்களுக்கு 50 % குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும். ஊடக செய்திகளின் அடிப்படையில், மத்திய அரசாங்கம் சென்ற வாரம் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்புகளை நீக்கப் போவதாக அறிவித்தது. மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பின், பயணிகளை கவரவும் சலுகைளை அறிவிக்கவும் விமான நிறுவனங்கள் முழுவீச்சியில் செயல்பட்டு வருகிறது.

இதனால் ஆகாச ஏர், இண்டிகோ, கோ பர்ஸ்ட், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் தங்களது விமான கட்டணத்தில் அதிரடியான விலை குறைப்பை செய்துள்ளது. இனிமேல் பயணிகளின் டிக்கெட் முன்பதிவு குறைவான விலையில் புக்செய்யலாம். ஆகாசா ஏர்லைன்ஸ் ஒரு மாதத்திற்கு முன் செயல்படத் துவங்கியது. தற்போது இந்நிறுவனம் மும்பை-பெங்களூரு வழித்தடத்தில் 2,000-2,200 ரூபாய்க்கு விமானப் பயண சேவையை வழங்கிவருகிறது. அதுவே சென்ற மாதத்துடன் ஒப்பிட்டால், அப்போது இந்த வழித்தடத்தின் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.3,948 ஆக இருந்தது. அதேநேரம் மும்பை-அகமதாபாத் பயணக் கட்டணம் முன்னதாக ரூ.5000 ஆக இருந்தது. இப்போது ரூ.1500ஆக குறைந்து உள்ளது. டெல்லியிலிருந்து லக்னோவுக்கு விமானத்தில் பயணித்தால் முன்னதாக ரூபாய்.3,500-4,000 வரை கட்டணம் இருந்தது.

தற்போது இக்கட்டணத்தை 1900 முதல் 2000 வரை குறைத்துள்ளது. அதேசமயம் கொச்சி மற்றும் பெங்களூருவின் கட்டணத்தைப் பற்றி பேசினால் இந்த வழித்தடத்தின் கட்டணமும் 1100 -1300 வரை குறைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மலிவான விமானகட்டண சேவையை Go-First, IndiGo மற்றும் Air Asia போன்ற நிறுவனங்கள் வழங்குகிறது. மே 2020-ல் கொரோனா காலத்தில் உள் நாட்டு விமானக் கட்டணங்களின் விலையை மத்திய அரசாங்கம் நிர்ணயித்தது. கொரோனா காலக்கட்டத்திற்கு பின் சென்ற மாதம் முதல் விமானத் துறையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உள் நாட்டு விமான நிறுவனங்களின் கட்டணவரம்பை நீக்கியதால், விமான டிக்கெட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது என இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் வாயிலாக விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. விமான நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Categories

Tech |