விமானத்தில் பயணம் செய்யும் போது எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதை பார்க்கலாம். அதாவது lighter மற்றும் தீப்பெட்டி போன்ற நெருப்பு பற்ற வைக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் சொல்லக் கூடாது. இதனையடுத்து கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதன்பிறகு கால்பந்து, கிரிக்கெட் பந்து போன்ற sports items எடுத்துச் செல்லக்கூடாது.
இதனையடுத்து துப்பாக்கி, பிஸ்டல் போன்ற பொருள்களை எடுத்துச் சொல்லக்கூடாது. இதைத் தொடர்ந்து ஆளில்லா குட்டி விமானம், Tools, எரிவாயு சம்பந்தமான பொருட்கள், கொசு மருந்து, எலி மருந்து, போன்ற விஷ மருந்துகளை எடுத்துச் செல்லக்கூடாது. மேலும் மெர்குரி, ஆசிட் போன்ற கெமிக்கல் பொருட்கள், காந்தம், கருவாடு, வத்தல் பொடி, ஊறுகாய் போன்ற பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது.