ஈரானில் ஸ்கைடைவிங் செய்த நபர் அந்தரத்தில் தொங்கிய போது தன் பாராஷூட்டை திறக்க முடியாமல் தவிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Sky Diving என்ற விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் வீரர்கள் விமானத்திலிருந்து குதித்து ocrobatic அசைவுகளை செய்வார்கள். அதன் பின்பு தங்கள் பேராஷூட்டை திறக்கும் வீரர்கள் மெதுவாக பாதுகாப்புடன் தரையிறங்குவார்கள். இந்நிலையில் ஈரானில் Sky Diving செய்த ஒரு நபரின் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
அதில் அந்த நபர் விமானத்திலிருந்து குதிக்கிறார். அப்போது அந்தரத்தில் தொங்கிய அவர் தன் பேராஷூட்டை திறக்க முயல்கிறார். ஆனால் அவரால் தன் பேராஷூட்டை திறக்க முடியவில்லை. இதனால் தவித்து கொண்டிருந்த அவரை அருகில் இருந்த பயிற்சியாளர் கடவுள் போன்று வந்து திறக்க உதவி காப்பாறுகிறார். அதன் பிறகு அவர் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.