நடிகர் விமல் , நடிகை வரலட்சுமி இணைந்து நடித்த கன்னிராசி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் முத்துக்குமரன் இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து , கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கன்னி ராசி ஆகும். இந்த படத்தில் பாண்டியராஜன், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிதுள்ளனர்.
இப்படமானது காதல், காமெடி மற்றும் குடும்ப பின்னணியில் தயாராகிஉள்ளது , கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே படம் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் வெளிவரவில்லை. தற்போது வருகின்றன நவம்பர் 27-ஆம் தேதி கன்னிராசி வெளியாக உள்ளது. படக்குழுவினரால் அறிவிக்கக்கப்பட்டுள்ளது.