விமல் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விமல். இவர் தற்போது நிர்மல் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது. படத்தில் விமலுக்கு தங்கையாக பிக் பாக்ஸ் மூலம் பிரபலமான அனிதா சம்பத் நடிக்கின்றார்.
படத்தை உதய் பிரிக்ஷன் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் நரேன், பாலசரவணன், தீபா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு காட்வின் இசையமைக்கின்றார். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மேலும் படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.