உதயநிதி ஸ்டாலின் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான போது எழுந்த விமர்சனத்தை உதயநிதி ஸ்டாலின் சேவை மூலமாக எதிர்கொண்டு நிரூபித்துள்ளார். அதேபோல் தற்போது அமைச்சரான பின்பும் எழுந்துள்ள விமர்சனத்தையும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சேவை மூலமாக நிரூபிப்பார் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளது. அதாவது இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு கிராமப்புற கடன்கள் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம் போன்ற முக்கிய துறைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த துறைகள் அனைத்துமே தமிழக ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களை மேம்படுத்த கூடியவை. அதனால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திறம்பட பணியாற்றி இந்த துறைகளை உதயநிதி ஸ்டாலின் மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் முதல்வராக பதவி வகித்தபோது சுய உதவி குழுக்களின் நிர்வகிக்கும் துறையை கையாண்டு வந்தேன். ஆனால் தற்போது அந்த துறை உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் திறம்பட இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.