Categories
தேசிய செய்திகள்

விபத்துக்குள்ளான பள்ளி வேன்…. காயமடைந்த குழந்தைகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலமான தானேபகுதியில் இன்று காலை ஒரு பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்நிலையில் சறுக்கலான பாதையில் டிரைவர் பின்னோக்கி போக முற்பட்டார். அப்போது  திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக வேனிலிருந்து மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையில் சில குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |