Categories
உலக செய்திகள்

விபத்தில் சிறுவன் பலி… தாயின் கண்ணீர் கோரிக்கை நிராகரிப்பு… மோசமான நடவடிக்கை எடுத்த அரசு…!!

பிரிட்டனில் ஸ்மார்ட் சாலையில் பழுதான காரை நிறுத்திய போது ட்ரக் மோதியதில் காரிலிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான திலேஷ் நரன் மற்றும் மீரா ஆகிய தம்பதியினரின் மகன் தேவ் நரன்(8). இவர் தன் தாத்தாவுடன் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் வாகன பயணித்துள்ளார். அப்போது இவர்களின் வாகனம் பழுதாகியதால் நெடுஞ்சாலையில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்போது, அங்கு வேகமாக வந்த ட்ரக் ஒன்று காரின் மீது மோதியதில் காரில் இருந்த தேவ் நரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதாவது இந்த ஸ்மார்ட் சாலையானது கூட்ட நெரிசலுக்கு ஏற்ப வாகனங்கள் செல்லக்கூடிய ஒரு வழி சாலை ஆகும். மேலும் அவசர நேரத்தில் அங்கு வாகனங்களையும் நிறுத்தலாம். இவ்வாறு அங்கு வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கும் போதுதான் சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த பர்மிங்காம் நெடுஞ்சாலையில் இதற்கு முன்பும் பல விபத்துக்கள் நடந்து பல உயிர்களை பறித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சேர்ந்து “Broken Herats Club” என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளனர். இவர்கள் ஸ்மார்ட் நெடுஞ்சாலைகளுக்கு தடை விதிக்கக்கோரி பிரிட்டன் அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கையும் விடுத்துள்ளார்கள். மேலும் நெடுஞ்சாலைத் துறையின் செயலாளரான Grant Shapps என்பவர் மக்களின் பாதுகாப்பிற்காக நெடுஞ்சாலைகளில் பழுதாகும் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்குவது குறித்து ஆலோசனைகளும் வழங்கியுள்ளார்.

எனினும் நெடுஞ்சாலைத்துறை நெடுஞ்சாலையின் பத்து மைல் தூரத்தில் மேலும் நெடுஞ் சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே அச்சாலையில் பழுதாகும் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடவசதியும் அகற்றப்படுகிறது. எனவே அடுத்த 60 வருடங்களில் மேலும் 101 விபத்துக்கள் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் நெடுஞ்சாலைத்துறை இவற்றை பொருட்படுத்தாமல் ஸ்மார்ட் சாலையை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

Categories

Tech |